சென்னை,
தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனே இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தலையிட்டு அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.