தமிழக செய்திகள்

விடுபட்ட மாணவர்களுக்கு உடனடி சாதி சான்றிதழ்

திருக்கோவிலூர் தாலுகாவில் விடுபட்ட மாணவர்களுக்கு உடனடி சாதி சான்றிதழ் வருவாய்த்துறையினர் பள்ளிகளுக்கு நேரில் சென்று விளக்கம்

தினத்தந்தி

திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, தாசில்தார் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் வருவாய்த்துறையினர் திருக்கோவிலூர் அரசு அங்கவை, சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரேனும் சாதி சான்றிதழ் வாங்காமல் விடுபட்டிருந்தால் பள்ளி நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது வருவாய்த்துறையினரை நேரில் அணுகினாலோ சாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும். இந்த பணியை கலெக்டர் உடனுக்குடன் செய்து கொடுக்க உத்தரவிட்டு உள்ளார். இதுபற்றி மாணவ-மாணவிகளிடம் எடுத்துக்கூறி அவர்களை பயன்பெற செய்ய வேண்டும் என்றனர். அப்போது தலைமை ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, ஜெயந்தி, கிராம உதவியாளர்கள் ரஜினி, நேதாஜி மற்றும் ஷர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்