தமிழக செய்திகள்

நூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்: மத்திய மந்திரி பியூஸ்கோயலிடம் ஜி.கே.வாசன் கோரிக்கை

நூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ்கோயலை சந்தித்து ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., இன்று மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார். அப்போது, அவர் நூல் விலை மிக அதிக அளவிலே ஏற்றம் அடைந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஒரு கேண்டி விலை ரூ.40 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே மத்திய அரசு நூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.

இங்கிலாந்து - இந்தியாவிற்கு இடையேயான வர்த்தக சுதந்திரத்திற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். 2 நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவிற்கு 2 மடங்கு பின்னலாடை வர்த்தகம் உயரும்.

இதனால் நலிவுற்ற பின்னலாடை தொழில்கள் வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும். ஆகவே உரிய நடவடிக்கைகளை, துரிதமாக மத்திய வர்த்தகதுறை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது