கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

இராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

இராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி

இராமேஸ்வரம்,

ராமலிங்க சுவாமி பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கேயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், ராமலிங்க சுவாமி பிரதிஷ்டை திருவிழா தொடங்கியுள்ளது. இதனையொட்டி நாளை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், 6 கால பூஜையும் நடைபெறும் எனவும், பின்னர் இரவில் நடை திறக்கப்பட்டு, இரவு கால பூஜை நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

இதன்காரணமாக நாளை முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்றும், நாளை கோயிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்