தமிழக செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை கொன்ற விவசாயி சிறையில் அடைப்பு

மனைவியை கொன்ற விவசாயி சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 62). விவசாயி. இவர் தனது மனைவி தனத்தை (55) ஆசைக்கு இணங்க மறுத்ததால் கடந்த 2-ந்தேதி கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். மனைவியை கொலை செய்த பெருமாள் தனக்குத்தானே கையை அறுத்து கொண்டு யாரோ தாக்கி விட்டதாக நாடகமாடினார். இதில் காயமடைந்த பெருமாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த பெருமாளை நேற்று இரவு பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பென்னாகரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து