மதுரை,
மாவட்டம் தோறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கட்சி நிகழ்ச்சிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் மதுரையில் உள்ள சிம்மக்கல் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் சிலை அமைக்க அரசு பல்வேறு தடைகளை விதித்தது. சட்ட போராட்டம் நடத்தி மதுரையில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையை திறக்க சட்ட போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி. இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.