தமிழக செய்திகள்

வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.25 ஆயிரம் அபராதம்

வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

பெருந்துறை

பெருந்துறையில் மளிகை கடைகள், பேக்கரிகள், இனிப்பு பலகார கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், சிறு பெட்டிக் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துக்கிருஷ்ணன், பேரூராட்சி மேற்பார்வையாளர் சம்பத் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் 25 கடைகளில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பாலித்தீன் டம்ளர்கள் என 85 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளை பறிமுதல் சய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை