தமிழக செய்திகள்

சென்னையில் பேருந்தில் கத்தியுடன் பயணம் செய்த மாணவர்கள் 4 பேர் தற்காலிக நீக்கம்

சென்னையில் பேருந்தில் கத்தியுடன் பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை

சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் பட்டா கத்தியுடன் பயணம் செய்யும் வீடியே காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

சென்னை பிராட்வேயிலிருந்து காரனோடைக்குச் செல்லும் 57 எஃப் வழித்தட பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களின் 'கத்தி' சாகசம் ஒரு வாரத்துக்கு முன்பு அரங்கேறியது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் பேலீசார் ஈடுபட்டுள்ளார்கள். முன்பு ரயிலில் கத்தியுடன் உலா, ரயில் நிலையங்களில் கத்திச் சண்டை என மாணவர்களின் போக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேருந்தில் மாணவர்களின் கத்தி கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 4 மாணவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த 4 மாணவர்களும் நிர்வாகத்தால் கல்லூரியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்