தமிழக செய்திகள்

சென்னையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, அண்ணனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை 18 வயது இளம்பெண் ஒருவரை அவரது தந்தையும், அண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் 2023-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.

நேற்று நடந்த விசாரணையில் நீதிபதி உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை மகன் ஆகிய 2 பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் இளம்பெண்ணுக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை