தமிழக செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு

சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இதேபோன்று சென்னையிலும் தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று 150, நேற்று முன்தினம் 160 மற்றும் அதற்கு முந்தின தினம் 167 ஆக பதிவாகி இருந்தது. சென்னையில் தொற்று எண்ணிக்கை இன்று 150 ஆக குறைந்து உள்ளது. கோவையில் பாதிப்பு இன்று 130 (நேற்று 132) ஆக உறுதியானது. இது நேற்று முன்தினம் 136 ஆக இருந்தது. செங்கல்பட்டில் 87 ஆக பதிவாகி உள்ளது. நேற்று 88 ஆகவும், நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 90 ஆகவும் இருந்தது.

இதுதவிர, ஈரோடு 88, திருப்பூர் 72, தஞ்சை 61, திருவள்ளூர் 52, சேலம் 55, நாமக்கல் 53, திருச்சி 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆனது இன்று பதிவாகி உள்ளது. இவற்றில் திருச்சி மற்றும் நாமக்கல்லில் எண்ணிக்கை சற்று அதிகரித்து உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்