தமிழக செய்திகள்

சேரம்பாடியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

சேரம்பாடியில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 2-ல் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், சுகாதாரத்துறை காசநோய் தடுப்பு பிரிவு ஆகியன சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் காசநோய் கண்டறிதல் மாதிரி சேகரிப்பு முகாமும் நடத்தப்பட்டது. இந்த முகாமை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி வட்டார காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசியதாவது:-

'2 வாரங்களுக்கு மேல் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் காசநோய் இருப்பின் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். அதன்படி டாக்டர்களின் பரிந்துரைபடி மருந்துகள் எடுத்துக் கொண்டால் காசநோயில் இருந்து விடுபடலாம்' என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்