தமிழக செய்திகள்

கோவையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.32 கோடி குவிந்தது

கோவையில், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.32 கோடி குவிந்தது.

தினத்தந்தி

கொரோனா நிவாரண பணிகளுக்காக...

தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கொரோனா நிவாரண பணிகளுக்காக, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி குவிந்து வருகிறது.அதன்படி, கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நேற்று நிதி கொடுத்தவர்கள் விவரம் வருமாறு:-

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு...

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சைமா அமைப்பின் சார்பில் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினர்.சக்தி குழுமத்தின் சார்பில் மாணிக்கம் ரூ.1 கோடி, பிரிக்கால் குழுமத்தின் சார்பில் வனிதாமோகன் ரூ.1 கோடி, கோ. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் டாக்டர் ரகுபதி வேலுசாமி ரூ.1 கோடி, பி.எஸ்.ஜி. குழுமத்தின் சார்பில் ரங்கசாமி ரூ.1 கோடி, ரூட்ஸ் குழுமத்தின் சார்பில் ராமசாமி ரூ.1 கோடி, சி.ஆர்.ஐ. பம்பு நிறுவனத்தின் சார்பில் ரூ.3 கோடி, ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை சார்பில் லட்சுமி நாராயணசாமி ரூ.1 கோடி என காசோலைகளாக நிவாரண நிதி வழங்கினர்.

தனியார் மருத்துவமனைகள்

கே.என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ரூ.2 கோடி, சாந்தி பீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடி, ஜி.வி.ஜி. பேப்பர் குழுமத்தின் சார்பில் ரூ.1 கோடி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.1 கோடி, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.1 கோடி, ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் சார்பில் ரூ.1 கோடி, தமிழ்நாடு ரைஸ்மில் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.1 கோடி,ஜெம் மருத்துவமனை சார்பில் டாக்டர் பழனிவேல் ரூ.25 லட்சம், ராயல்கேர் மருத்துவமனை சார்பில் டாக்டர் மாதேஸ்வரம் ரூ.50 லட்சம், கங்கா மருத்துவமனை சார்பில் டாக்டர் ராஜசேகரன் ரூ.50 லட்சம்,கொங்குநாடு மருத்துவமனை சார்பில் டாக்டர் கார்த்திகேயன் ராஜூ ரூ.10 லட்சம், குமரன் மருத்துவமனை சார்பில் டாக்டர் ஹரிபிரசாத், டாக்டர் கோகுல் ஆகியோர் ரூ.10 லட்சம், பி.பி.ஜி. மருத்துவமனை சார்பில் டாக்டர் தங்கவேல் ரூ.10 லட்சம், என்.ஜி. மருத்துவமனை சார்பில் டாக்டர் மனோகரன் ரூ.10 லட்சம், கற்பகம் மருத்துவக்கல்லூரி நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சம், அபிராமி மருத்துவமனை சார்பில் டாக்டர் செந்தில் ரூ.10 லட்சம்,குன்னூர் டீ எஸ்டேட் சார்பில் ரூ.50 லட்சம், மருதமலை சேனாதிபதி சார்பில் ரூ.50 லட்சம், ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.50 லட்சம், இந்துஸ்தான் கல்லூரி சார்பில் கண்ணையன், சரஸ்வதி ஆகியோர் ரூ.50 லட்சம் என காசோலைகளாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்கினர்.

காசோலைகளாக...

அகில இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு சார்பில் ராஜ்குமார் ரூ.25 லட்சம், மேற்கு மாநகராட்சி சார்பில் தனபால் ரூ.50 லட்சம், சுகுணா இண்டஸ்டீரிஸ் சார்பில் அனீஸ்குமார் ரூ.25 லட்சம், கிராப்ட்ஸ்மேன் சார்பில் ரூ.25 லட்சம், கிரெடாய் சார்பில் அரவிந்த் ரூ.25 லட்சம்,டெக்கான் கார்வேல் பம்ஸ் சார்பில் கே.வி. கார்த்திக் ரூ.25 லட்சம், எல்.ஜி.பி. குழுமத்தின் சார்பில் ரூ.25 லட்சம், சுமங்கலி ஜீவல்லர்ஸ் சார்பில் ரூ.25 லட்சம், அனிதா டெக்ஸ்காட் சார்பில் சந்திரசேகர் ரூ.50 லட்சம், கனிம வள மைனிங் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.25 லட்சம்,கிஸ்கால் சார்பில் கண்ணப்பன் ரூ.25 லட்சம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.25 லட்சம், அம்பிகா காட்டன் மில்ஸ் சார்பில் ரூ.50 லட்சம், காட்மா சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம், ஆர்த்தி அசோசியேட்ஸ் சார்பில் முத்துராமன் ரூ.10 லட்சம், கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் சார்பில் ஆர்.பி.கே.ராஜமன்னார் ரூ.10 லட்சம்,தானுகோடி ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்ஸ் சார்பில் மாசிலாமணி ரூ.10

லட்சம், லட்சுமி செராமிக்ஸ் சார்பில் ரூ.15 லட்சம், வினோத்- சோனலி டெக்ஸ்டைல்ஸ் சார்பில் ரூ.15 லட்சம், ஏ பிஞ்சர் டுலிங் ஏஷியா லிமிடெட் சார்பில் ரூ.15 லட்சம், அன்னப்பூரணா குழுமத்தின் சார்பில் சீனிவாசன் ரூ.10 லட்சம் காசோலைகளாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்கினர்.

மொத்தம் ரூ.32 கோடி நிதி

ராஜஸ்தானி சங்கத்தின் சார்பில் ரூ.11 லட்சம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கிருஷ்ணன் ரூ.10 லட்சம், வாழ்கரோ பவுன்டேஷன் சார்பில் ரூ.10 லட்சம், முருகானந்தம் ஆர்த்தி பில்டர்ஸ் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம், திறந்தவெளி ரைஸ்மில் சங்கத்தின் சார்பில் அருள்மொழி, ராம்பிரசாத் ஆகியோர் ரூ.10 லட்சம், பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணன் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம், கே.ஜி. டெனிம் சார்பில் ரூ.50 லட்சம்,சிம்ஸ் மருத்துவமனை சார்பில் ரூ.10 லட்சம், அக்குவா சப் என்ஜினீயரிங் சார்பில் நரேந்தர் ரூ.1 கோடி, ஒசாமா நிறுவனத்தின் சார்பில் ரூ.16 லட்சம், ஆர்.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தின் சார்பில் ரூ.20 லட்சம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சங்கத்தின் சார்பில் ரூ.16 லட்சம், ஓஷிமா நிறுவனத்தின் சார்பில் ரூ.12 லட்சம்,நீலகிரி மாவட்டத்தின் சார்பில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ரூ.29 லட்சம், சிலம்பு சாம்பியன் சிறுமி பிரகதி ரூ.25 ஆயிரம், சிறுவன் துவாரகேஷ் ரூ.1,250 காசோலைகளாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்கினர்.

அந்தவகையில் மொத்தம் சுமார் ரூ.32 கோடி நிதி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், கோவை மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது