தமிழக செய்திகள்

கடலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

கடலூரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமிநகரை சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் கார்த்திகேயன் (வயது 22). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுவாதி (20). 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கார்த்திகேயன் அடிக்கடி மது குடித்து விட்டு வருவது வழக்கம். இதை மனைவி சுவாதி தட்டிக்கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அதே போல் குடித்து விட்டு வந்த கார்த்திகேயனை சுவாதி கண்டித்தார். இதில் அவர்களுக்குள் சண்டை வந்தது. இதையடுத்து சுவாதி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை தனது வீட்டுக்கு வந்து பார்த்த போது, அங்கு கார்த்திகேயன் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்து கிடந்த கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது பற்றி சுவாதி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்