ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிக அளவு உள்ளன.
ஆண்டுதோறும் கடல் ஆமைகள் முட்டையிடும் சீசன் காலம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை ஆகும். கடந்த 3 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டுச் சென்ற ஏராளமான முட்டைகள் சேகரிக்கப்பட்டு, எம்.ஆர்.சத்திரம் கடற்கரை பகுதியில் உள்ள குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்தன. வன நாளையொட்டி அந்த ஆமை குஞ்சுகள் நேற்று கடலில் விடப்பட்டன.