தமிழக செய்திகள்

கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கோபி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

கோபி

கோபி புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் தீனதயாளன் (வயது 22). டிரைவர். கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் கலைவாணி (22). இவர் கோபியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

தீனதயாளனும், கலைவாணியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுடைய காதலுக்கு 2 பேரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரி கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை