தமிழக செய்திகள்

அரசு பள்ளிக்கூடங்களில் கரும்பலகைக்கு பதிலாக 90 ஆயிரம் ‘ஸ்மார்ட் போர்டுகள்’ - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிக்கூடங்களில் கரும்பலகைக்கு பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட உள்ளன என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது தங்கத்தின் விலை 1 பவுன் ரூ.28 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் தாலிக்கு தங்கம் வழங்கும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரசு தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டு வருகிறது.

விலையில்லா மடிக்கணினிகள் 45 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை மிஞ்சும் வகையில் தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகளை சிறந்த கல்வியாளராக மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் கொண்ட சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் முதல்- அமைச்சர் வெளியிட உள்ளார். தொழிற்சாலைகளுக்கு அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7,500 அரசு பள்ளிகளில் இன்டர்நெட், கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். அரசு பள்ளிக்கூடங்களில் கரும்பலகைக்கு பதிலாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட உள்ளது.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளிகளை உருவாக்குவோம். தமிழ்நாட்டில் பழைய பள்ளி கட்டிடங்களை அகற்ற முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்