தமிழக செய்திகள்

தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தேனியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்