தமிழக செய்திகள்

ஜனவரி மாதம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

திருச்சி,

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழா மேடை அருகே எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த கண்காட்சியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

2018 ஜனவரி மாதம் சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுவார். முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இருவரும் இணக்கமாக தான் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.