தமிழக செய்திகள்

காயல்பட்டினத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

காயல்பட்டினத்தில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

தினத்தந்தி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி பகுதியில் வசித்து வருபவர் யூசுப் சாகிப். இவரது வீட்டில் மனைவி சம்சு பாத்திமா மற்றும் மாமியார் சித்திக் கஜிதா ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூசுப் சாகிப்பும், மனைவியும் வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டை பூட்டிவிட்டு சித்திக் சுஜிதா, தனது மகள் யூசுப் சுலேகா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் சித்திக் கஜிதாவின் பேத்தி மஸ்கூரா அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைத்து திறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் சித்திக் சுஜிதா மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு தங்க நெக்லஸ், கம்மல் ஒரு ஜோடி ஒரு மோதிரம் ஆக மொத்தம் 3 பவுன் தங்க நகைகளும், ரூ.39 ஆயிரத்து 500-ம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து