தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் யூனியன் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

கோவில்பட்டியில் யூனியன் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி (கிழக்கு):

இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவர் காலனி மேட்டு தெருவில் இரு பக்கமும் சாலை மிகவும் குண்டு குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தர வேண்டும், இப்பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் நூறுநாள் வேலை அடையாள அட்டை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்துக்கு கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் அலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை யூனியன் ஆணையாளர் ராணியிடம் வழங்கினர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததால், முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்