தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளி மீது தாக்குதல்

குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் கீழ மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் சுடலை (வயது 44). தொழிலாளி. சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செல்லும் போது 2 வாலிபர்கள் தெருவை வழிமறித்து நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை மோட்டார் சைக்கிள் சல்ல வழிவிட்டு நிற்குமாறு சுடலை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் சுடலையை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த சுடலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சுடலையை தாக்கிய கருங்காளி அம்மன் கோவில் தெரு முத்துகிருஷ்ணன், முப்பிடாதி அம்மன் கோவில் தெரு முத்துக்குமார் ஆகிய இருவர் மீதும் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...