தமிழக செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில்தொழிலாளி மீது தாக்குதல்

குலசேகரன்பட்டினத்தில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார்தேடிவருகின்றனர்.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 36). அதே ஊர் கச்சேரி தெருவைச் சேர்ந்த ராஜா மகன் இசக்கிமுத்து. இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக வெல்டிங் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இசக்கிமுத்துவை வேலையிலிருந்து ஒப்பந்ததாரர் நீக்கிவிட்டாரம்.

இதற்கிடையில் ஏற்கனவே இருவரும் வேலை பார்த்த போது முத்துக்குமாரின் சம்பள பணத்தில் இசக்கிமுத்து கமிஷன் எடுத்துள்ளார். சம்பவத்தன்று இசக்கிமுத்திடம் கமிஷன் எடுத்த விவரத்தை முத்துக்குமார் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த இசக்கிமுத்து தாக்கியதில் முத்துகுமார் படுகாயம் அடைந்தார். அவர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்