குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த பண்டாரம், ராணி ஆகியோர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வீடுகளில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் அவர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளிலிருந்து வெளியேறினர். தொடர்ந்து அந்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.