தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பஜாரையொட்டி திருக்குளம் அருகே பழமை வாய்ந்த குளக்கரை வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கடந்த 3 வருடங்களாக திறக்கப்படாத எவர்சில்வர் உண்டியலை உடைத்து அதிலிருந்து சுமார் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் சில்லறை காசுகளை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் திருவேணி அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்