தமிழக செய்திகள்

கருங்கல் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஒர்க் ஷாப் உரிமையாளர் தற்கொலை

கருங்கல் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருங்கல்:

கருங்கல் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒர்க்ஷாப் உரிமையாளர்

கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று பரவிளை பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ். இவருக்கு 2 மகள்களும், 5 மகன்கள் உண்டு. இதில் 4-வது மகன் மணிகண்டன் (வயது35). இவர் கருங்கல் அருகே உலகன்விளை பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார்.

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணம் ஆகாததால் கடந்த சில நாட்களாக மணிகண்டன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுகுடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்