தமிழக செய்திகள்

மொடக்குறிச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் வாலிபர் கைது

மொடக்குறிச்சி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தினத்தந்தி

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமி

மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுமி நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதைக்காக அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளார்.

கைது

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரகுமான் (வயது 27) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டு அலறினா. சிறுமியின் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச்சென்று ரகுமானை பிடித்து மொடக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ரகுமானை கைது செய்தனர். 

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்