தமிழக செய்திகள்

முள்ளக்காட்டில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட இடம் தேர்வு:அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

முள்ளக்காட்டில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முள்ளக்காடு கிராம பஞ்சாயத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ள இடத்தை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது முள்ளக்காடு பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் நிர்மல், பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சேகர், உச்சினி மகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தர் ரகுபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்