மதுரை,
மதுரை மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தில், மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் குடிநீர், சாலை வசதிகள் உள்ளதா? என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர். மேலும் நடுப்பட்டி கிராமத்தில், வயல் வழியாக சடலத்தை எடுத்து சென்ற விவகாரத்தில் தலைமை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.