தமிழக செய்திகள்

நாகையில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் நாகையில், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

தினத்தந்தி

நாகை புதிய கடற்கரை சாலையில் நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, ஊக்கப்படுத்தும் விதமாக இந்த ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் தையல், காளான் வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரித்தல், செல்போன் சர்வீஸ், தேனீ வளர்ப்பு, அழகு கலை, துரித உணவு தயாரித்தல், சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் உள்ளிட்ட 27 பிரிவுகளின் கீழ் இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்த இலவச தையல் பயிற்சியினை நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் பார்வையிட்டார். தொடர்ந்து பயிற்சி அளிக்கும் முறை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு இலவசமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது