ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு வார இறுதி நாட்கள், விசேஷ நாட்களில் காய்கறிகளின் வரத்து அதிகமாக காணப்படும். நேற்று முன்தினம் மழை காரணமாக காய்கறிகள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் உழவர் சந்தைகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.17 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான 59 டன் காய்கறிகள் விற்பனையானது.