தமிழக செய்திகள்

பெரம்பலூரில் கிணற்றில் விழுந்த நபர்களை காப்பாற்றியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த தீயணைப்பு வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர பதக்கம்

தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் சி.சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தினத்தந்தி

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் மாவுக்கார்காடு என்ற இடத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி அன்று கிணற்றில் சிக்கிய நபர்களில் 2-வது நபரை காப்பாற்றும்போது, விஷவாயு தாக்கி தீயணைப்பு வீரர் ரா.ராஜ்குமார் வீரமரணம் அடைந்தார். அவரது துணிச்சலான மற்றும் தன்னலமற்ற பணியை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் 2021-ம் ஆண்டுக்கான ஜனாதிபதி வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில்ரூ.10 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் ரூ.44.42 லட்சம் தொகை அவரது குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது