தமிழக செய்திகள்

கொரோனாவுக்கு முதியவர் பலி

புதுவையில் முதியவர் கொரோனாவுக்கு பலியானார்

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 501 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 35 பேர், வீடுகளில் 151 பேர் என 186 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 10 பேர் குணமடைந்தனர். அதே நேரத்தில் மூலக்குளம் மகாவீர் நகரை சேர்ந்த 84 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,879 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் தொற்று பரவல் 0.96 சதவீதமாகவும், குணமடைவது 98.40 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணையை 2 ஆயிரத்து 936 பேரும், 2-வது தவணையை 2 ஆயிரத்து 922 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 13 லட்சத்து 26 ஆயிரத்து 574 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது