தமிழக செய்திகள்

ரங்கம்பாளையம் பகுதியில்வீணாகும் குடிநீர்

ரங்கம்பாளையம் பகுதியில் குடிநீர் வீணாகி வருகிறது,

தினத்தந்தி

ஈரோடு மாநகராட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் தொடங்கி பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சில இடங்களில் இந்த திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுத்தாலும், இன்னும் சோதனை அடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி முக்கிய குழாய்களில் தண்ணீர் விட்டு சோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. ஈரோடு சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம் பகுதியில் அடிக்கடி சோதனை பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இணைப்புகள் முறைப்படுத்தப்படாததால் தண்ணீர் சாலையில் ஓடி வீணாகிறது. ஒரே நேரத்தில் அனைத்து இணைப்புகளில் இருந்தும் தண்ணீர் வெளியேறுவதால் சாலையில் திடீர் ஆறு உருவானதுபோல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீருக்கு மக்கள் பல பகுதிகளில் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தண்ணீரை வீணாக்கும் நடவடிக்கையை நிறுத்தி, சிறந்த முறையில் சோதனை ஓட்டம் நடத்தி, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை