தமிழக செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30,144 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30,144 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30,144 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 34 ஆயிரத்து 378 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக 99 பள்ளி, கல்லூரிகளில் 117 தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு மையங்களுக்கும் தலா ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 117 பேர் மற்றும் வட்டாரத்திற்கு தலா ஒரு பறக்கும் படைகள் என 7 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

30,144 பேர் எழுதினர்

தேர்வு மையங்கள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சார் கருவூல அலுவலகங்களில் தலா ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்வு நடைபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து மையங்களுக்கும் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வர்கள் சோதனைகளுக்குப் பிறகு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பித்திருந்த 34,378 பேரில் 30,144 பேர் தேர்வு எழுதினர். 4 ஆயிரத்து 4,234 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வினை பார்வையிட்டார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து