தமிழக செய்திகள்

சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து - தமிழக அரசு

சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அணைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார். அதில் இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.05.2021 அன்று துவக்கி வைத்தார். இந்த அரசாணைக்கு ஏற்ப அனைத்து ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில், ஆவின் மேலாண்மை இயக்குநரால் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இதன் அடிப்படையில் சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போது கீழ்கண்ட 11 சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது.

மேற்கண்ட நபர்களுடைய சில்லறை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

மேலும் இந்த சிறப்பு குழு தினந்தோறும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், இது போன்ற தவறுகளை (நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது) சில்லறை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்து மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இந்த நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்