தமிழக செய்திகள்

சாயர்புரம் பகுதி பள்ளிகளில்மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

சாயர்புரம் பகுதி பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் ஸ்ரீ முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம் தூயமேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, போப் நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ முத்துமாலை அம்மன் பள்ளி தாளாளர் பால்ராஜ், தலைமை ஆசிரியை பவானி, முன்னாள் தர்மகர்த்தா பி.டி பரமசிவம் நாடார், தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயபாண்டியன், தலைமை ஆசிரியை எப்சிநிர்மலா, சாயர்புரம் சேகர குரு மனோகர், போப் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலன், சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, நிர்வாக அதிகாரி பிரபா, துணைத் தலைவர் பிரியாமேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது