சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 562 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிக பட்ச விலையாக ரூ.6,910-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.6,060-க்கும் ஏலம் போனது. மொத்தம் 8 லட்சத்து 15 ஆயிரத்து 338 ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.