தமிழக செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் மாதவராவ் இவர் வேட்புமனுதாக்கல் செய்ததிலிருந்தே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலை 8 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 63.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் மரணமடைந்துள்ளதால் அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? என குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதியில் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒருவேளை காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவு வந்த பிறகே

இவ்வாறு அவர் கூறினார்.