தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 48 ஆக குறைந்தது

புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,930 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 535 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...