தமிழக செய்திகள்

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இன்று (புதன்கிழமை) பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

மேலும் தமிழகம், புதுச்சேரி கடலோரத்தில் தென்மேற்கு திசையில் இருந்து, மேற்கு நோக்கி மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல், தென் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு கூறினர்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

ஜி.பஜார், ஆலங்குடி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், செம்பரம்பாக்கம், செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், தாம்பரம், கோலப்பாக்கம், புழல், பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், விரிஞ்சிபுரம், மேலாலத்தூர், சோழிங்கர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு