தமிழக செய்திகள்

தஞ்சாவூரில் மாணவர்கள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை

சிலம்பம் சுற்றிக் கொண்டே 4 மாணவர்கள் 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். 14 மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு சுருள் வாள் சுற்றினர். அதில் 9 வயதான வந்தனா என்ற மாற்றுத்திறனாளி மாணவியும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்.

அதே போல் 4 மாணவர்கள் சிலம்பம் சுற்றிக் கொண்டே 2 மணி நேரம் சைக்கிளில் சென்றனர். இந்த மாணவர்கள் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அவர்களின் சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்