தமிழக செய்திகள்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை பதிவாகி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் மேல் ஆலத்தூர், ஆம்பூரில் தலா 12 சென்டி மீட்டர், குடியாத்தத்தில் 9 சென்டி மீட்டர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மதுரை விமான நிலையத்தில் தலா 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய இடங்களில் தலா 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு