சென்னை,
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 18-ந்தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழக கடலோர பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்தது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், வட தமிழகத்தில் மழை பெய்தது.