தமிழக செய்திகள்

காரைக்காலில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

காரைக்கால்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு காரைக்கால் மாவட்ட விவசாய சங்க தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி