தமிழக செய்திகள்

கடந்த 2 தினங்களில் ரூ. 292 கோடிக்கு மதுபானம் விற்பனை

இரு தினங்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ. 292 கோடிக்கு நடைபெற்றுள்ளது

சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவல்,, ஊரடங்கு காரணமாக கடந்த 35 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.தமிழகம் முழுவதும் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட 27 மாவட்டங்களிலும் 3 நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

திங்கள்கிழமை டாஸ்மாக் கடைகளில் ரூ. 165 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையான நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 127 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

அதிகபட்சமாக நேற்று மதுரையில் ரூ. 37.28 கோடிக்கும் அதன் தொடர்ச்சியாக சென்னை -ரூ. 33.41கோடி, சேலம் -ரூ. 28.76 கோடி,திருச்சி-;ரூ. 27.64 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.

இதனால் இரு தினங்களில் தமிழகத்தில் மதுபான விற்பனை ரூ. 292 கோடிக்கு நடைபெற்றுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு