தமிழக செய்திகள்

கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்ட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசியதாவது:-

கடந்த 3 மாதங்களில் சுமார் 30,000 இரட்டை பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்வதற்காக 4 நாள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு