சென்னை,
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆகஸ்ட் 23-ம் தேதியில் இருந்து அக்டோபர் 6-ம் தேதி( அதாவது இன்று வரை) சென்னையின் மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளி மாணவர்கள் 3 பேரும், 27-ம் தேதி பள்ளி மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
* செப்டம்பர் 2-ம் தேதியில் 11-ம் வகுப்பு மாணவர் அக்பர் என்பவரும், 3-ம் தேதியில் கல்லூரி மாணவர் சுஷாந்த் எனபவரும் உயிரிழந்துள்ளனர். 25-ம் தேதி கல்லூரி மாணவர்கள், சைலேஷ்பாபு மற்றும் பிரனீத் குமார் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
* அக்டோபர் 1,2,4, 5-ம் தேதிகளில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் மற்றும் இரு வெளிமாநில தொழிலாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.