தமிழக செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 1995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,201 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று வரை 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதனைதொடர்ந்து 1,379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி