தமிழக செய்திகள்

முத்தாரம்மன் கோவில் வளாகத்தில்ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா

முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது.

குலசேகரன்பட்டினம்:

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் கவிதா முன்னிலை வகித்தார். ஆன்மிக புத்தக விற்பனை நிலைய உபயதாரர் தூத்துக்குடி அழகர் ஜூவல்லர்ஸ் தலைவர் ஜெயராமன், பத்மாவதி அம்மாள் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக சாகுபுரம் டி.சி.டபுள்யு மூத்த உதவித் தலைவர் சீனிவாசன், உடன்குடி செல்வம் ஜூவல்லர்ஸ் சண்முகசுந்தரம், திருச்செந்தூர் காஞ்சி பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி, கோவில் உள்துறை செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி, கோவில் ஆய்வாளர் பகவதி, சிதம்பரநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தூத்துக்குடி அழகர் ஜூவல்லர்ஸ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.