தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். அங்குள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்கிடம் அவர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், "தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசா இந்து மதம் குறித்தும், இந்து மக்கள் குறித்தும் தரம் தாழ்த்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது மேடையில் இந்து மக்களை தரம் தாழ்த்தி பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.